மத்திய அரசால் அறிவிக்கபட்டுள்ள பத்மஸ்ரீ விருதுகள் இந்த முறையும் பாண்டிச்சேரி புறக்கணிக்க பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் எத்தனையையோ சிறப்பான புகழ் வாய்ந்த நபர்கள் பாண்டிச்சேரியில் உள்ளனர். பாண்டிச்சேரி அரசும் கடந்த பல ஆண்டு களாக மத்திய அரசுக்கு தனது சீபாரிசுகளை அனுப்பி வந்தாலும் அதை பரிசீலிக்க மத்திய அரசு தவறி விடுகிறது.பாண்டிச்சேரியில் உள்ள பாண்டிச்சேரி பல்கலை கூடமும் மத்திய அரசை பின்பற்றியே பாண்டிச்சேரி மக்களை புறக்கணித்து உள்ளது. அடுத்த வருடமாவது பாண்டிச்சேரியீன் விடுதலைக்கு பெரும் பாடுப்பட்ட திருவளர்கள் வ.சுப்பையா, மடுகரை வெங்கடசுப்ப ரெட்டியார், எட்வர்ட் குபேர் இவர்களுக்கு பாரதரத்னா விருதும், பிரபல மருத்துவர்கள் இரத்தின ஜனர்த்தினன்,நல்லாம்,பிரபல மொழி பெயர்ப்பாளர் A .ராஜா, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், நீதியரசர் தாவுது அன்னுசாமி, விவசாயத்தில் புரட்சி செய்த வேங்கடபதி ரெட்டியார் போன்ற பலர் இந்திய அரசின் விருதுக்கும், பாண்டிச்சேரி பல்கலை கூட விருதுக்கும் தகுதி வாய்ந்தவர்கள். வரும் ஆண்டிலாவது பாண்டிச்சேரி மக்களையும் விருதுகளுக்கு பரிசிலனை செய்ய வேண்டும்.