Thursday, January 27, 2011

padmasri awards, pondicherry university doctrate award

மத்திய அரசால் அறிவிக்கபட்டுள்ள பத்மஸ்ரீ விருதுகள் இந்த முறையும் பாண்டிச்சேரி புறக்கணிக்க பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் எத்தனையையோ சிறப்பான புகழ் வாய்ந்த  நபர்கள்  பாண்டிச்சேரியில் உள்ளனர். பாண்டிச்சேரி அரசும் கடந்த  பல ஆண்டு களாக மத்திய அரசுக்கு தனது  சீபாரிசுகளை அனுப்பி வந்தாலும்  அதை பரிசீலிக்க மத்திய அரசு தவறி விடுகிறது.பாண்டிச்சேரியில் உள்ள பாண்டிச்சேரி பல்கலை கூடமும் மத்திய அரசை பின்பற்றியே   பாண்டிச்சேரி மக்களை  புறக்கணித்து உள்ளது.  அடுத்த வருடமாவது பாண்டிச்சேரியீன்  விடுதலைக்கு பெரும் பாடுப்பட்ட திருவளர்கள் வ.சுப்பையா, மடுகரை வெங்கடசுப்ப ரெட்டியார், எட்வர்ட் குபேர் இவர்களுக்கு பாரதரத்னா விருதும், பிரபல மருத்துவர்கள் இரத்தின ஜனர்த்தினன்,நல்லாம்,பிரபல மொழி பெயர்ப்பாளர் A .ராஜா, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், நீதியரசர் தாவுது அன்னுசாமி, விவசாயத்தில் புரட்சி செய்த வேங்கடபதி ரெட்டியார் போன்ற பலர் இந்திய அரசின் விருதுக்கும், பாண்டிச்சேரி பல்கலை கூட விருதுக்கும் தகுதி வாய்ந்தவர்கள். வரும் ஆண்டிலாவது பாண்டிச்சேரி மக்களையும் விருதுகளுக்கு பரிசிலனை செய்ய வேண்டும்.

Thursday, October 21, 2010

pondicherry: pondicherry

pondicherry: pondicherry: "மகாத்மா காந்தி, பாரதியார், அரவிந்தர், வாஞ்சிநாதன் போன்றவர்கள் பாண்டிச்சேரிக்கு வந்தும் பாண்டிச்சேரியில் பிரெஞ்சு அரசுக்கு எதிரான சுதந்திர ப..."

pondicherry

மகாத்மா காந்தி, பாரதியார், அரவிந்தர், வாஞ்சிநாதன் போன்றவர்கள் பாண்டிச்சேரிக்கு  வந்தும் பாண்டிச்சேரியில் பிரெஞ்சு அரசுக்கு எதிரான சுதந்திர போராட்டம்  1947 வரை எதுவும்  நடைபெறவில்லை.  1947 ல் இந்தியா சுதந்திரம் அடைந்த  பின்னரே பாண்டிச்சேரியில் சுதந்திர போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சிறு சிறு அளவில் நடைபெற்ற போராட்டம் 1954 - 55 ல் தீவிரமானது. 1956 ம் ஆண்டு மே மாதம் பிரான்ஸ் - இந்தியா நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட  ஒரு ஒப்பந்தம் மூலம் பாண்டிச்சேரிக்கு சுதந்திரம் தரப்பட்டது. ஆனாலும் 1963 ம் ஆண்டு வரை பிரெஞ்சு சட்டமே நடை முறையில் இருந்தது. பிரெஞ்சு நாட்டின் ஆளுகையில் பாண்டிச்சேரி இருந்த போது பாண்டிச்சேரி நல்ல நிலையிலேயே இருந்தது. பாண்டிச்சேரிஐ  சுற்றி இருந்த பிரிட்டிஷ் இந்திய பகுதிஐ விட  பாண்டிச்சேரியில்   பொருட்களின் விலை  மிகவும் கம்மியாகவே இருந்தது. பிரான்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நல்ல தரமான பொருட்கள் பாண்டிச்சேரியில் கிடைத்த காரணத்தால் பாண்டிச்சேரியில் வியாபாரம் நன்கு நடந்தது. பாண்டிச்சேரி மக்களின் பொருளாதார வாழ்க்கை நல்ல நிலைமையில் இருந்து வந்த காரணத்தால் மட்டுமே இங்கு சுதந்திர போராட்டம் தீவிரமாக நடை பெற வில்லை என்பதற்கு காரணமாகும். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் இந்தியா ஒரே இந்தியாவாக இருந்தால் மட்டுமே இந்திய பாதுகாப்புக்கு நல்லதாக இருக்கும் என்பதால் பாண்டிச்சேரி மக்கள் சுதந்திரம் கேட்டு கிளர்ச்சி செய்தனர். பிரான்ஸ் நாட்டின் ஆளுகை பகுதியாக இருந்த போது கிடைத்த வசதியை விட பாண்டிச்சேரி இந்தியாவின் ஆளுகை பகுதியாக ஆன பின்பு கிடைத்த வளர்ச்சி மிகவும் குறைவானதே. 1963 க்கு பிறகு இந்தியாவின் மற்ற பகுதியில் இருந்து பாண்டிச்சேரியில் வந்து குடியேறிய மக்கள் தொகை மிகவும் அதிகம். இதற்கு காரணம் பாண்டிச்சேரி இல் இருந்த வசதிகளே காரணம். இன்று பாண்டிச்சேரி அரசாங்க பதவிகள், அரசியல், வியாபாரம் போன்றவற்றில் இவர்களின் ஆளுகையே அதிகமாக உள்ளது.

Sunday, September 26, 2010

pondicherry: அரசியல் நாகரிகம்

pondicherry: அரசியல் நாகரிகம்: "இன்றைய தமிழ் நாட்டில், அரசியல் நாகரிகம் என்பது என்னவென்று கேட்பார்கள். வடக்கே இன்றும் அங்கு உள்ள அனைத்து கட்சி அரசியல்வாதிகள் இடையே நல்ல நட..."

அரசியல் நாகரிகம்

இன்றைய தமிழ் நாட்டில், அரசியல் நாகரிகம் என்பது என்னவென்று கேட்பார்கள். வடக்கே இன்றும் அங்கு உள்ள அனைத்து கட்சி  அரசியல்வாதிகள் இடையே நல்ல நட்பு நிலவுகின்றது. தமிழ்நாட்டில்  மட்டுமே  கேவலமான சூழ்நிலை  காணப்படுகின்றது. அறுபதுகளில் வரை தமிழ் நாட்டிலும் நல்ல மரியாதையான அரசியல் நாகரிகம் நிலவியது.1968 ல்  சென்னை முதல் அமைச்சர்ராக  அண்ணா இருந்தபோது காமராஜ் அவர்கள்  காங்கிரஸ் கட்சி தலைவரராகவும் திருமதி இந்திராகாந்தி பிரதம மந்திரியாகவும் இருந்தனர்.அப்போது சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர்கள்  சிரித்து பேசி மகிழ்த காட்சி இது.