this blogger contents pondicherry history,culture,impartdent persons,tourist places,french-indian culture.
Thursday, October 21, 2010
pondicherry
மகாத்மா காந்தி, பாரதியார், அரவிந்தர், வாஞ்சிநாதன் போன்றவர்கள் பாண்டிச்சேரிக்கு வந்தும் பாண்டிச்சேரியில் பிரெஞ்சு அரசுக்கு எதிரான சுதந்திர போராட்டம் 1947 வரை எதுவும் நடைபெறவில்லை. 1947 ல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரே பாண்டிச்சேரியில் சுதந்திர போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சிறு சிறு அளவில் நடைபெற்ற போராட்டம் 1954 - 55 ல் தீவிரமானது. 1956 ம் ஆண்டு மே மாதம் பிரான்ஸ் - இந்தியா நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு ஒப்பந்தம் மூலம் பாண்டிச்சேரிக்கு சுதந்திரம் தரப்பட்டது. ஆனாலும் 1963 ம் ஆண்டு வரை பிரெஞ்சு சட்டமே நடை முறையில் இருந்தது. பிரெஞ்சு நாட்டின் ஆளுகையில் பாண்டிச்சேரி இருந்த போது பாண்டிச்சேரி நல்ல நிலையிலேயே இருந்தது. பாண்டிச்சேரிஐ சுற்றி இருந்த பிரிட்டிஷ் இந்திய பகுதிஐ விட பாண்டிச்சேரியில் பொருட்களின் விலை மிகவும் கம்மியாகவே இருந்தது. பிரான்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நல்ல தரமான பொருட்கள் பாண்டிச்சேரியில் கிடைத்த காரணத்தால் பாண்டிச்சேரியில் வியாபாரம் நன்கு நடந்தது. பாண்டிச்சேரி மக்களின் பொருளாதார வாழ்க்கை நல்ல நிலைமையில் இருந்து வந்த காரணத்தால் மட்டுமே இங்கு சுதந்திர போராட்டம் தீவிரமாக நடை பெற வில்லை என்பதற்கு காரணமாகும். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் இந்தியா ஒரே இந்தியாவாக இருந்தால் மட்டுமே இந்திய பாதுகாப்புக்கு நல்லதாக இருக்கும் என்பதால் பாண்டிச்சேரி மக்கள் சுதந்திரம் கேட்டு கிளர்ச்சி செய்தனர். பிரான்ஸ் நாட்டின் ஆளுகை பகுதியாக இருந்த போது கிடைத்த வசதியை விட பாண்டிச்சேரி இந்தியாவின் ஆளுகை பகுதியாக ஆன பின்பு கிடைத்த வளர்ச்சி மிகவும் குறைவானதே. 1963 க்கு பிறகு இந்தியாவின் மற்ற பகுதியில் இருந்து பாண்டிச்சேரியில் வந்து குடியேறிய மக்கள் தொகை மிகவும் அதிகம். இதற்கு காரணம் பாண்டிச்சேரி இல் இருந்த வசதிகளே காரணம். இன்று பாண்டிச்சேரி அரசாங்க பதவிகள், அரசியல், வியாபாரம் போன்றவற்றில் இவர்களின் ஆளுகையே அதிகமாக உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment