this blogger contents pondicherry history,culture,impartdent persons,tourist places,french-indian culture.
Saturday, September 18, 2010
திரு M.O.H. பாரூக் மரைகாயர் பாண்டிச்சேரின் மண்ணின் மைந்தர் ஆவர். 1937 செப்டம்பர் 6 இல் காரைக்காலில் பிறந்த இவர் தனது 27 வது வயதில் பாண்டிச்சேரி சட்ட மன்றத்திற்கு MLA தேர்ந்து எடுக்கப்பட்டார். அவ் வருடமே பாண்டிச்சேரி சட்ட மன்றத்தின் சபா நாயகராக பதவி ஏற்றார். இந்தியாவில் மிக சிறிய வயதில் இப் பதவியில் முதலில் இருந்தவரும் இவரே. தனது 30 ஆவது வயதில் பாண்டிச்சேரின் முதல் அமைச்சராக பதவி ஏற்றார். மூன்று முறை பாண்டிச்சேரின் முதல் அமைச்சர் ஆகவும், மூன்று முறை பாண்டிச்சேரி மாநிலத்தின் பாராளு மன்றத்தின் உறுப்பினர் ஆகவும் பதவி வகித்தார். மத்திய அரசில் சுற்றுலா மற்றும் விமான துறை துணை அமைச்சர் ஆகவும் இருந்துள்ளார். தமிழில் மிகுந்த ஆர்வம் உடைய இவர் சிறந்த பேச்சாளர் ஆவர்.நிர்வாக திறனும் , மக்களின் நலத்தில் அக்கறை உடையவர். சவூதி அரேபியாவின் இந்திய தூதர் ஆக இருந்து இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரை செல்வோர்கு வேண்டிய சௌகரியங்களை சிறப்பாக செய்தார்.சவுதி அரேபியாவில் பணி புரியும் இந்தியர்களின் நலளின் அக்கறை கொண்டு அவர்களுக்கு வேண்டிய காரியங்கள் செய்தார். இப்போது ஜார்கண்ட் மாநில ஆளுநராக பதவிஇல் இருக்கும் இவர் தனது அரசியல் அனுபவங்களை கொண்டு அம் மாநில மக்கள்ளுக்கு பாடுபடுவார். ஜார்கண்டு மாநிலம் இந்தியாவின் முன்னேறிய மாநிலம்மாக மாறும் என்பதில் ஐயம்மில்லை.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment